தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்…

post
நம்ம ஊருல தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு அதிகரித்து வருகிறது. இதற்க்கு முழுக்க முழுக்க வங்கிகளின் சேவைக் கட்டணக் கெடுபிடிகள் காரணம் என்று தெறிகிறது.

அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணங்களை பல வங்கிகள் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.150 ஆகவும், ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் அதற்கு தனிச் சேவைக் கட்டணம் என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகளின் இந்த புதிய விதிமுறைகளால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வங்கிக் கணக்கை மூடும் முடிவுக்கு வந்துள்ளனர்.

அதே நேரம் தபால்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், தபால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 இருப்பு தொகையாக இருந்தால் போதும், ரூ.500 வைப்புத் தொகையாக இருந்தால் காசோலை வசதி கிடைக்கிறது.
வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த வித கட்டணம் இல்லாமல் ஏடிஎம் அட்டையும் கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு சேவைக் கட்டணம் எதுவும் கிடையாது.

மதுரையில் உள்ள நான்கு தலைமை தபால் நிலையங்களில் தபால் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளையும் பயன்படுத்த முடியும்.
மேலும், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், முகவரி உறுதிச் சான்று நகல் இருந்தால் போதுமானது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நமக்கான சேமிப்பு கணக்கு தொடங்கப்படும்.

Leave a Response