மின்சார தட்டுப்பாடு குறைந்துள்ளது : மத்திய அரசு…

eb
2016 – 17 ம் ஆண்டில் நாட்டின் மின்சார தட்டுப்பாடு 0.7 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 2013 – 14ம் ஆண்டில் 4.2 சதவீதமாக இருந்த மின்சார தட்டுப்பாடு, 2016 – 17 ல் 0.7 சதவீதமாக குறைந்துள்ளது. 2014 ல் மின் தட்டுப்பாடு 6103 மெகாவாட்டாக இருந்தது. 2017 ல் இது 2608 மெகாவாட்டாக குறைந்துள்ளது. அண்டை நாடுகளுக்கு மின்சார வழங்கும் அளவிற்கு இந்தியாவில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

2016 – 17 ம் ஆண்டில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு 6444 மில்லியன் யூனிட் மின்சாரத்தை இந்தியா விநியோகம் செய்துள்ளது.2014 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மின் உற்பத்தி 33.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response