இனி ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை…

petrol
தலைப்பு பார்த்து பயந்து போயிட்டிங்களா நம்ம ஊருக்கு இன்னும் வரல இந்த சட்டம் ஆனால் கூடிய சிக்கிரம் வரும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. அது என்ன சட்டம் தெரிஞ்சிக முழுசா படிங்க புரியும்.

அதவாது உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நாளை முதல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர்.இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response