வரும் 30-ல் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு : உணவகங்கள் முழு அடைப்பு

tax
நம்ம எல்லாரும் படத்துல பாக்கும்போது படத்துல வரி பத்தி பாத்து இருப்போம். இந்நிலையில் பாதி பேருக்கு நம்ம பயன் படுத்துற எல்லாம் பொருளுக்கும் வரி இருக்குற விஷயம் தெரியாது. இப்படியெல்லாம் இருக்குற நேரத்துல நம்ம மத்திய அரசு ஜிஎஸ்டி என்கிற வரிச்சட்டம் அமல்படுத்த உள்ளது.

இந்த ஜிஎஸ்டி சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்படி, உணவகங்களுக்கான வரி அதிகரித்துள்ளது.

இதுவரை 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் 18 சதவீதம் வரை உயர்கிறது. இதனால், கடும் வரிச்சுமை ஏற்படும் எனவும் இதைச் சமாளிக்க உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் உணவகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இதனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உணவகங்களுக்கான வரி சதவீதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாட்டு உணவகங்கள் சங்கத்தின் தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியுள்ளார்.

Leave a Response