பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் : விரைவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்…

seng
நம் பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறை பல்வேறு வகை புது சட்டங்கள் மற்றும் கல்வி மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றது. ஏற்கனவே கிரேடு முறைகள் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்கள் மாற்றம் என பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது புதிதாக ஒரு திட்டம் ஒன்று அமலுக்கு வருகிறது.

அதவாது என்ன வென்றால் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் கார்டு, லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக பயன்படும். இதில் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம்பெற்றிருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட் கார்டு கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வு எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும், இந்த கார்டில் மாணவர்கள் பயிலும் ,மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து அறிந்துக் கொள்ளாலாம். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Leave a Response