விஜய் , ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் திடீர் மாற்றம்…

vijay
விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் கத்தி , துப்பாக்கி என்று கூறியே ஆகணும். இந்த கூட்டணி மறுபடியும் சேர இருக்கிறது என்றதும். லைக்கா தயாரிப்பு நிறுவனமே தாயாரிக்க இருந்தது. ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டே நூறுகோடி என்றதால் பயந்து விலகி கொண்டது.

இப்போது சன் பிக்சர்ஸ் உள்ளே வந்திருக்கிறது. விஜய்யின் வேட்டைக்காரன், சுறா படங்களை வாங்கி வெளியிட்டது சன் பிக்சர்ஸ்தான் என்பது நினைவிருக்கலாம். இப்போது நேரடியாகவே விஜய் படத்தைத் தயாரிக்க வந்துள்ளது. தீபாவளி முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

விஜய் படங்களில் இதுவரை இல்லாத பிரமாண்டம் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response