மைசூர் அரண்மனையில் உள்ள ஏ.டி.எம்-ல் தீ விபத்து: கருகிய 3 லட்சம் பணம்…

mysor
மைசூர் சென்றால் அரண்மனை சுற்றி பாருங்கள் என்று அனைவரும் கூறும் அளவிற்கு அந்த அரண்மனை மிக பிரமாண்டமாக இருக்கும். மைசூர் அரண்மனையை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வரஹா கேட் எனப்படும் கோட்டை வாசல் அருகே டிக்கெட் கவுன்ட்டர் செயல்படுகிறது. இதன் அருகிலேயே ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்தது.

இந்த தீ மலமலவென அருகில் இருந்த டிக்கெட் கவுன்ட்டருக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ச்சி அடைந்த காவலாளி காவல்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தும் டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த எந்திரம், ஆவணங்கள், ஏ.டி.எம். எந்திரம், ஏ.சி. ஆகியவை எரிந்து நாசமானது. தீ விபத்தின்போது பாதுகாப்பு துறையினர், பார்வையாளர்கள் யாரும் அங்கு இல்லை

தீவிபத்து நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன்தினம்தான் 5 லட்சம் ரூபாய் நிரப்பட்டது. அதில் 2 லட்சம் ரூபாயை வாடிக்கையாளர்கள் எடுத்திருந்ததும் தெரியவந்தது. மீதி இருந்த 3 லட்சம் ரூபாய், ஏ.டி.எம். எந்திரத்துடன் எரிந்து நாசமானதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மைசூர் அரண்மனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கங்கபதி கோயிலுக்கு அருகே உள்ள பிரதான நுழைவாயிலின் வலதுபுறத்தில் உள்ள மின்சார சுழற்சிகளில் ஏற்பட்ட மின்கசிவு இந்த விபத்து நிகழ்நிதிருக்கலாம் என மூத்த துறை அதிகாரி குருராஜ் தெரிவித்தார்.

Leave a Response