ஆண் காவல்துறையினரால் அவதிப்படும் பெண் சுற்றுலா பயணிகள்: குற்றாலம்…

kutralam
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை சீசனின் போது குற்றாலத்திற்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதனால் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறுவார்கள்.

தற்போது மேற்குத்தொடர்ச்சி மலையான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சீசனுக்கு முன்பே சுற்றுலா பயணிகள் அதிகமாக குற்றால அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக ஆண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறைந்த அளவில் பெண் காவலர்களை பணியில் அமர்த்திவிட்டு ஆண்களையே அதிகம் பணியமர்த்தி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் குளிக்கும் பகுதிகளில் ஆண் காவலர்களை பணியமர்த்தி உள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

பெண் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அருவிகளின் அருகில் ஆண் காவலர்களுக்கு என்ன வேலை பெண்கள் குளிக்கும் இடத்தில் பெண் காவலர்களைத்தன் பணியமர்த்த வேண்டும். இது என்ன புதியதாக உள்ளது இது போன்று ஆண் காவலர்களை பணியர்த்தியது யார் அவர்மீதும் அருவிகளின் அருகில் நின்று பெண் சுற்றுலா பயணிகளுக்கு இன்னல்கள் கொடுத்த ஆண் காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Response