தெரிந்தே விபசாரம் செய்தால் தப்பில்லை…

prostitutes1
இன்றைய நாட்டில் விபச்சாரம் என்பது சாதாரணமாக இருந்து வருகிறது என்பதே உண்மை. அதை நிருப்பிக்கும் விதமாக உயர்நீதிமன்றம் புது உத்தரவு ஒன்று வெளியுட்டு உள்ளது. அதாவது என்னவென்றால் விபச்சாரத் தொழில் செய்பவர்கள் தான் விருப்பம் பட்டு அத்தொழிலை செய்தால் எவ்வித தவறும் இல்லை. ஒருவரை வற்புடுத்தி விபச்சாரம் செய்தால் மட்டுமே தவறு என்றும் கூறியுள்ளது.

சூரத் பகுதியில் செயல்படும் விபசார விடுதியில் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதியன்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பாலியல் தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதில் வினோத் படேல் என்ற நபர் பாலியல் தொழிலாளியின் விருப்பப்படியே தான் அங்கு சென்றதாகவும். இதனை குற்றம் எனக் கூறி போலீசார் 370 தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் எப்படி கைது செய்ய முடியும் எனவும் கேட்டு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, பாலியல் தொழிலில் ஒருவர் விருப்பப்பட்டு ஈடுபடும்போது அதனை குற்றம் எனச் சொல்ல முடியாது என்று கூறியதோடு, கைது செய்யப்பட்ட வினோத் படேலை உடனே விடுவிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

கட்டாயத்தின்பேரில், யாரேனும் ஒருவரை மிரட்டி பாலியல் தொழில் செய்ய வைத்தால் மட்டுமே அது தவறு என்றாகிவிடும். விருப்பத்தின்பேரில் தெரிந்தே அந்த தொழிலை செய்வதால் அவரை தண்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Response