நெல்லை டாஸ்மாக் கடையில் ஓட்டை மதுபானங்கள் ஆட்டை…!

nellai
தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவின் படி நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் ஒயின்ஷாப்களை மூடி வருகின்ற நிலையில்.   நெல்லையில் அதிர்ச்சியிட்டும் செய்தி ஒன்று  நடந்து உள்ளது.

அதாவது நெல்லை அருகேயுள்ள ராதாபுரம் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.   தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன.

அதன்படி இந்த மதுக்கடையும் மூடப்பட்டு ராதாபுரம் செல்லும் சாலைக்கு மாற்றப்பட்டது.   இந்நிலையில் கடையை மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ந்தனர்.   மேலும் கடையில் இருந்த விலை உயர்ந்த 339 மது பாட்டில்கள் திருடி போய் இருப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.   இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ராமர்பாண்டியன் ராதாபுரம் போலீஸில் புகார் செய்தார்.     ஸ்ஐ சிவசங்கரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து டாஸ்மாக் கடையில் துளை போட்டு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response