ரத்த தானம் செய்த இரண்டு இளைஞர்களுக்காக அபராதம் செலுத்திய பெண்ண போலீஸ்!..

traffic
பெங்களூருவில் உள்ள எம்.ஜி சாலையில் மரண வேகத்தில் சென்ற இரண்டு பைக்குளை, மிகவும் சிரமப்பட்டு 5 போக்குவரத்து காவலர்கள் கொண்ட குழு மடக்கிப்பிடித்தது. காவலர்கள் நடத்திய விசாரணையில், அந்த இரு இளைஞர்களும் ரத்த தானம் செய்வதற்காக அவசரமாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் சாலையில் வேகமாக சென்ற காரணத்திற்காக இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஏ.டி.எம்களில் பணம் இல்லாததால், அபராதத்தை செலுத்திவிட்டு ரத்த தானம் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் அந்த இரண்டு இளைஞர்களும் தவித்து வந்தனர். வேண்டுமானால் அபராதத்திற்கு பதிலாக, காவலர்கள் அனைவருக்கும் காலை உணவு வாங்கிக் கொடுத்துவிடுவதாக கூட அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க காவலர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் அங்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் அனிதா குமாரி என்பவர், அந்த இளைஞர்கள் நல்ல செயலுக்காகத்தான் பைக்கில் வேகமாக சென்றார்கள் என்பதால் அவர்களுக்கான அபராதத்தை தானே செலுத்தியுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்கும் காலை உணவுக்காக தலா 100 ரூபாய் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளைஞர்கள் பேஸ்புக்கில் பதிவிட, துணை ஆய்வாளர் அனிதா குமாரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Leave a Response