ஜெ. அண்ணன் மகள் தீபா மீது பண மோசடி புகர் கொடுத்த ஜானிகிராமன்!..

deeppaa
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெ.ஜெயாலலித்தாவின் மறைவிற்கு பிறகு அவரைபோன்றே உருவ ஒற்றுமை கொண்டுள்ளதாக கூறி, அவரது அண்ணன் ஜெயச்சந்திரன் மகளான தீபாவை தனிக்கட்சி தொடங்கும்படி, பல தரப்பினரும் வலியுறுத்திவந்தனர். இதையடுத்து, அவர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தானே வேட்ப்பாளராக களமிறங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்த இடைதேர்தலும் ரத்தாகி விட்டது.

இந்த நிலையில் ஜெ.வின் அண்ணன் மகளான ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணம் மோசடி புகர் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆரம்பித்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சியின் உறுப்பினர் விண்ணப்ப படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் அளவிக்கான மோசடி தீபா செய்திருப்பதாக நேசப்பக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜெ. அண்ணன் மகள் தீபா துவங்கிய எம்.ஜி.ஆர். அம்மா.தீப பேரவை சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை மறைத்து பணம் வசூலிப்பதாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதன்பேரில் தீபா மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response