இனிகோ பிரபாகரன், அனிஷா சேவியர் நடிப்பில் உருவாகி வரும் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஐயப்பனின் கைவண்ணத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சுவா கத்தி’. இப்படத்தில் இனிகோ பிரபாகரன், அனிஷா சேவியர், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். சி மைத்ரேயன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.