காதல் திருமணம், கர்ப்பிணி பெண், அடித்து கொன்ற பெற்றோர்!..

murder-the-exhibition
காதல் திருமணம் செய்து கொண்ட கர்பிணிப் பெண்ணை, அவரது பெற்றோரே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வீட்டின் எதிர்ப்பை மீறி, தான் காதலித்து வந்த நபரை சர்மிளா என்ற பெண் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சர்மிளா சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 7 மாத கர்பிணிப் பெண்ணான சர்மிளாவை அவரது பெற்றோரே கொலை செய்துள்ள விஷயம் தெரியவந்துள்ளது. கருவை கலைக்க மறுத்ததால் சர்மிளாவை அவரது பெற்றோரே அடித்துக் கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்ணை தனது பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response