நடிகர் வடிவேலு காமெடி வில்லனாக நடிக்கிறாரா!..

vadivelu-rk-jan05
நடிகர் ஆர்.கே. நடிக்கும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் நடிகர் வடிவேலு காமெடி வில்லனாக நடிக்கவுள்ளார்.

நடிகர் வடிவேலு ரீஎன்ட்ரியில் நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்திருந்த வடிவேலு ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். அதையடுத்து ‘கத்திச்சண்டை’, ‘சிவலிங்கா’ படங்களில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது விஜய்யுடன் அவரது 61-வது படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து ஆர்கேவுடன் இணைந்து ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் காமெடியனாக இல்லாமல் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு. முக்கியமாக, இதுவரை வெறும் காமெடியனாக மட்டுமே நடித்து வந்துள்ள வடிவேலு, இந்த படத்தில் காமெடி வில்லனாக நடிக்கிறார். அந்த வகையில், அவரும், ஆர்கேவும் எதிரும் புதிருமான காமெடி வேடங்களில் நடிக்கிறார்கள்.

Leave a Response