இளைஞர்கள் தீயவழியில் எவ்வாறு செல்கின்றார்கள் என்பதை சொல்லும் “பிச்சுவாகத்தி”

pichu-1
படம்- “பிச்சுவாகத்தி”

தயாரிப்பு- C.மாதையன், இயக்கம்- ஐயப்பன், இசை- N.R.ரகுநந்தன், ஒளிப்பதிவு- K.G.வெங்கடேஷ், படத்தொகுப்பு- SP.ராஜாசேதுபதி, பாடல்கள்- யுகபாரதி, சண்டை பயிற்சி- ஹரி தினேஷ்,

நட்சத்திரங்கள்- இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீ பிரியங்கா, அனிஷா, யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், பால சரவணன், ரமேஷ் திலக், காளி வெங்கட், R.N.R. மனோகர், பருத்திவீரன் சுஜாத்தா,

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்க,

இனிகோ மற்றும் மாதையன் மகன் செங்குட்டுவன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, முறையே ஸ்ரீ பிரியங்கா மற்றும் அனுஷ்கா அவர்தம் ஜோடியாக நடிக்க ,

யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், பால சரவணன், ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் உடன் நடிக்க ,
ஐயப்பன் இயக்கி இருக்கும் படம் பிச்சுவா கத்தி

கிராமபுறத்தி மகிழ்சியாக சுற்றித் திரியும் மூன்று இளைஞர்கள் விளையாட்டாய் ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்டணையை அனுபவிக்க காவல் நிலையம் செல்கின்றனர்.

காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார்.

இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.

ருசிகண்ட பூனை போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப் போகிறானர். இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா?

இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார் ? ,ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதை எல்லாம் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறோம் ” என்கிறார் இயக்குனர்

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பேரரசு, எஸ் ஆர் பிரபாகரன் , பாக்கியராஜ் கண்ணன் , தயாரிப்பாளர் சங்க கவுரவச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன.

இரண்டு இளைஞர்கள் அவர்களது இணை … இவர்களின் காதல் , இளைஞர்களுக்கு வரும் பகை என்று படம் போவது முன்னோட்டத்தில் தெரிந்தது .

என் ஆர் ரகுநந்தன் இசையில் யுக பாரதி வரிகளில் அமைந்து திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் இனிமையாக இருந்தன . சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர்கள் காளி வெங்கட் பால சரவணன் ஆகியோர் தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்ததற்காக தயாரிப்பாளரைப் பாராட்டினர் .

இவர்களும் ரமேஷ் திலக்கும்” தயாரிப்பாளர் மகன் என்ற பந்தா இல்லாமல் செங்குட்டுவன் எளிமையாக பழகியது மறக்க முடியாதது ” என்று பாராட்டினர் .

நிகழ்வில் பேசிய இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்

“நான் இயக்கிய சுந்தர பாண்டியன் படத்தில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இனிகோ தான் .

சசிகுமார் ஹீரோவாக முடிவான பிறகு இனிகோ இன்னொரு கேரக்டரில் நடித்தார். திறமைசாலியான இனிகோவுக்கு இந்தப் படம் சுந்தர பாண்டியனாக அமையட்டும் .

தமிழ்ப் படத்தின் கதாநாயகிகள் பலரும் தமிழர்களாக இல்லை என்பது வருத்தமான விஷயம் . இந்தப் படத்தின் கதாநாயகி ஸ்ரீ பிரியங்கா ஒரு தமிழ்ப் பெண் . பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் .

இதுவரை தமிழ்ப் பெண்கள் அதிகம் நடிக்க வராததற்குக் காரணம் ஒழுக்க மீறல் குறித்த பயம்தான் . ஆனால் இப்போது அப்படி இல்லை.

எல்லோருமே நட்புடன்தான் பழகுகின்றனர் . எனவே இன்னும் நிறைய தமிழ்ப் பெண்கள் கதாநாயகிகளாக நடிக்க வர வேண்டும் ” என்றார் எஸ் ஆர் பிரபாகரன்.

Leave a Response