இரயிலில் வாட்ஸ் ஆப் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்!..

baby
ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்ட கர்பிணிக்கு, சீனியர் மருத்துவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அளித்த டிப்ஸ்களை கொண்டு பிரசவம் பார்த்துள்ளார் மருத்துவ மாணவர் ஒருவர்.

இரயிலில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்ட கர்பிணிக்கு, சீனியர் மருத்துவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அளித்த டிப்ஸ்களை கொண்டு பிரசவம் பார்த்துள்ளார் மருத்துவ மாணவர் ஒருவர்.
அஹமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிறை மாத கர்ப்பிணியான சித்ரலேகா என்பவர் தனது கணவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். நாக்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென சித்ரலேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.

ரயில் நின்றவுடன் சித்ரலேகா இருந்த பெட்டிக்கு வந்த டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே காவலர்களும் அவருக்கு மருத்துவரின் தேவை அவசியம் என்பதை உணர்ந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ரெயிலில் மருத்துவர்கள் யாரும் பயணம் செய்கிறார்களா? என்பதை விசாரிக்கத் துவங்கினர்.
மருத்துவர்கள் யாரும் அந்த ரயிலில் பயணிக்காத நிலையில், புனேவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் விபின் கட்சே என்ற மாணவர் சித்ரலேகாவுக்கு உதவ முன் வந்தார்.

விபின் வந்து பார்த்த போது சித்ரலேகாவுக்கு அதிக அளவு ரத்தப் போக்கு இருந்துள்ளது. மேலும் குழந்தையின் தலைக்கு பதிலாக, தோள்பட்டை கருப்பை வாயில் சிக்கிக் கொண்டிருந்துள்ளது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த விபின், மருத்துவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவில், சித்ரலேகாவின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த ஷிகா மாலிக் என்ற மருத்துவர், சித்ரலேகாவுக்கு எப்படி பிரசவம் பார்க்க வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலமாகவே டிப்ஸ் அளித்துள்ளார். இதனைக் கொண்டு விபின் பிரசவம் பார்த்ததில், சித்ரலேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் நாக்பூர் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழு, சித்ரலேகாவுக்கு முதலுதவி செய்துள்ளனர்.

Leave a Response