ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு ரெட் மி 4 விற்பனை!…

mi
சீனாவை தேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களான ஜியோமி தங்களின் 7வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதனையடுத்து அவர்களது இணையதளமான Mi.com-ல் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1 ரூபாய்க்கு போன், ஸ்பெஷல் ஆஃபர்கள், வங்கியின் கேஷ்பேக் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெட்மி நோட் 4 போன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்ய வருகிறது. இதனை மி ஆப் மூலமாக தான் வாங்க முடியும். உங்கள் மொபைலில் மி ஆப் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். விற்பனை இன்று ( ஏப்ரல் 6ஆம் தேதி )காலை 10மணிக்கு தொடங்கும்.

மதியம் 2 மணிக்கு 40 மி பேண்ட் 2, பவர் பேங்க் ஆகியவற்றை 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அதே போல் அன்றைய நாள் ரெட்மி 4A ரோஸ் கோல்டு விற்பனையையும் ஜியோமி துவங்கியுள்ளது. ரெட்மி 3எஸ் பிரைம், மி 5 மற்றும் மி மேக்ஸ் ஆகியவற்றை இணையதளம் மூலம் வாங்கிக்கொள்ளலாம். இவை இல்லாமல் சாஃப்ட் கேஸ், மி புரொடக்ட் வாங்குவோருக்கு ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடலுக்கு ஏற்றாற்போல் விலையில் மாற்றம் இருக்கும்.

Leave a Response