விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘காளி’ படத்தை வாங்கி உலகம் முழுவதும் வெளியிடும் உதயநிதி…

vijay aantani
விஜய் ஆண்டனி ‘எமன்’ படத்தை தொடர்ந்து நடிக்க வேண்டிய படம் ‘அண்ணாதுரை’. இந்தப் படத்தை இயக்குனர் சீனிவாசன் இயக்க இருந்தார். படத்தை ராதிகா சரத்குமாரின் ‘ராடான் மீடியா’ நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. ‘அண்ணாதுரை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, விஜய் ஆண்டனி தரப்புக்கும், ராதிகா சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் நின்றுபோனது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைத்துள்ளனர். 1980 -ல் ரஜினி நடித்து வெளியான படம் ‘காளி’.

இப்போது காளி என்ற தலைப்பை விஜய் ஆண்டனி கைப்பற்றியுள்ளார். ‘வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்த படத்தை முதலில் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் பட நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது.அனால் விஜய் ஆண்டனி சம்பளம் தொடர்பாக அவர்களிடையே சரியான உடன்பாடு ஏற்படவில்லை. எனவே ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்’ நிறுவனமே ‘காளி’ படத்தை தயாரிக்கிறது.

பின்னர் இந்த ‘காளி’ படம் முழுமையாக ரெடியான பிறகு அந்தப் படத்தை வாங்கி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Response