27 வார கருவை கலைக்க பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு!

karbini
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பாக ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது அந்த குழந்தை வளர்ச்சி மிகவும் குறைவாக உடல் அங்கீகனத்துடன் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்த பெண் அந்த கருவை கலைத்து விட முடிவு செய்தார். ஆனால் அதற்கு டாக்டர்கள் சம்மதிக்கவில்லை. நம் இந்தியாவில் இந்திய கருக்கலைப்பு சட்டப்படி குழந்தை தரித்து 20 வாரங்களுக்கு பிறகு கருவை கலைப்பது குற்றம் என்று வரவேற்கப்பட்டுள்ளது. எனவே டாக்டர்கள் அந்த பெண்ணின் வேண்டுகோளை ஏற்கவில்லை. இதனால் அந்த பெண் தனது கருவை கலைக்க அனுமதி கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் பாப்தே, நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடைபெற்று வந்தது.

அந்த பெண்ணின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி நடந்த மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இப்போது கருவை கலைத்தால் அந்த கரு உயிர்வாழும் தன்மையுடன் பிறக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் இருவரும் அந்த பெண் 27 வார கருவை கலைக்க கூடாது என்று இன்று அதிரடியாக உத்தரவிட்டனர். அந்த கருவால் அந்த பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Response