தொப்பி சின்னம் வேண்டும் என்று கேட்டு பெற்ற சசி அணி!

hat-symbol
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் சசிகலா அணியினருக்கு ஆட்டோ ரிக்‌ஷாவை சின்னமாக ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சசிகலா அணியினர் அதற்கு பதிலாக தொப்பி சின்னம் கேட்டு அடம்பிடிப்பதாக தெரிகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, காலியான ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் பலமுனைப் போட்டி நிலவி வருகிறது.
auto
இதற்கிடையில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதால், தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இவர்களின் மோதலின் விளைவாக தேர்தல் ஆணையம் இரட்டை இலை முடக்கப்பட்டது. இதையடுத்து ஒ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இது வேண்டாம் என சசிகலா அணியினர் அடம்பிடித்ததால் அவர்களுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,. சசி அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரும், பன்னீர் அணிக்கு அதிமுக புரட்சிதலைவி அம்மா பெயரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response