ஜியோக்கு இனி தடை இல்லை; இலவச சேவை தொடரும்!..

jio
ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலைதொடர்பு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்,‘4ஜி’ என்னும் நான்காம் தலைமுறை தொலைதொடர்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.சிம் கார்டு, அழைப்புகள், இன்டர்நெட் சேவை என எல்லாவற்றையும் அது இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்ட இந்த இலவச சேவை, பின்னர் 2017 மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஜியோவின் இலவச சேவையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதற்கு டிராய் அளித்த அனுமதிக்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் ‘டிடிசாட்’ என்றழைக்கப்படுகிற தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தன. அதில், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிப்பதுடன், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு டிராய்க்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ஜியோ மற்றும் டிராய் தரப்பு கருத்துகளை கேட்டு விட்டு, தீர்ப்பை தொலைதொடர்பு தீர்ப்பாயம் கடந்த வாரம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை மறுஆய்வு செய்து, அதன் முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று டிராய்க்கு உத்தரவிட்டது.ஜியோக்கு இனி தடை இல்லை இலவச சேவை தொடரும் என்று தொலைதொடர்பு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Response