100 மில்லியன் வாட்ஸ் அப்ப் அக்கவுண்ட்களுக்கு ஆபத்து!

Whatsapp-web-browser-desktop
கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் ஊடுறுவி தகவல்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியின் குறுந்தகவல்களை என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியும் என செக் பாயிண்ட் மென்பொருள் டெக்னாலஜீஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் கணினி பதிப்புகளில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக 100 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பாதிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிழை மூலம் பெரும்பாலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் அக்கவுண்ட்களை முழுமையாக கையாள முடியும். ஹேக்கர் தரப்பில் ஒரே புகைப்படத்தை அனுப்பி அக்கவுண்டினை முழுமையாக இயக்க முடியும். இதில் வாடிக்கையாளர் மற்றவர்களுக்கு அனுப்பிய குருந்தகவல், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இயக்க முடியும் என செக் பாயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிழையை பயன்படுத்தி டிஜிட்டல் புகைப்படத்தில் மால்வேர் கோட்களை புகுத்தி, வாடிக்கையாளர் தரப்பில் புகைப்படத்தை கிளிக் செய்யப்பட்டதும் அக்கவுண்டினை முழுமையாக இயக்க வழி செய்வதோடு ஹேக் செய்யப்படுபவரின் அக்கவுண்டில் இருக்கும் காண்டாக்ளில் பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response