எச்எம்டி குளோபல் வெளியிடும் நோக்கியா 7, நோக்கியா 8 ஸ்மார்ட்போன்கள் !..

Nokia-8-image-2
எச்எம்டி குளோபல் மிக விரைவில் நோக்கியா 7, நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களாக இவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.எச்எம்டி குளோபல் சார்பில் விரைவில் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி நோக்கியா 7, நோக்கியா 8 ஸ்மார்ட்போன்கள் தயாராகி வருவதாகவும் இவை சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 7, நோக்கியா 8 ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்படலாம். இரு ஸ்மார்ட்போன்களில் ஒன்றில் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவும், மற்றொரு மாடலில் குவாட் எச்டி 1440×2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஃபுல் எச்டி மாடலில் சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரு ஸ்மார்ட்போன்களும் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, வித்தியாசமான கேமரா வடிவமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 7, நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், கைரேகை ஸ்கேனர் மற்றும் அதிநவீன கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ் பயன்படுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது. எச்எம்டி குளோபல் இதே ஆண்டில் சில புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட இருக்கும் நிலையில் ஒரு மாடலில் 4 ஜிபி ரேம் மற்றொரு மாடலில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விலையை பொருத்த வரை 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 4,500 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,400, மற்றொரு மாடல் CNY 4,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,600 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது….

Leave a Response