திருநங்கையர்களின் நலவாழ்வுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு கேரளா

thi
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் திருநங்கையர்களின் நலவாழ்வுக்கென ரூ.10 கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நலத்துறை மந்திரி ஷைலஜா இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

மாநிலத்தில் வாழும் திருநங்கையர்களுக்கு அரசு ஏற்கனவே அடையாள அட்டைகளை வழங்கியுள்ளதாகவும், அவர்களின் புனர்வாழ்வு மற்றும் நலவாழ்வுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அரசு அளித்து வருவதாகவும் ஷைலஜா குறிப்பிட்டார்.

திருநங்கையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள பத்து கோடி ரூபாய் நிதி செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Response