புதியதாக வெளியாகும் சியோமி ரெட்மி ப்ரோ 2: முழு தகவல்கள்

xiaomi_Redmi_Pro
சியோமி ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி ப்ரோ 2 மீடியாடெக் ஹீலியோ P25 பிராசஸர், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 12 எம்பி சிங்கில் லென்ஸ் கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி ப்ரோ 2 இரு மாடல்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 1599 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,301 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் 1799 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,215 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

முழுமையான மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P25 பிராசஸர், 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 6ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என்றும் மெமரியை நீட்டிப்பது குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

புகைப்படங்களை எடுக்க சோனி IMX362 சென்சார் கொண்ட 12 எம்பி டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. கைரேகை ஸ்கேனர் வசதியும் 4500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response