ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் போல் தீபா தியானம் செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து வரும் முடிவை அறிவிப்பதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று 40 நிமிடங்கள் மவுனமாக இருந்தார். அந்த மவுனம் பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.மு.க.வில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.அதே வழியில் கடந்த 12-ந்தேதி தீபாவும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று தியானம் இருந்தார். தீபாவின் தியானம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் விமர்சனத்தைதான் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதை விட்டு விட்டு இந்த மாதிரி தியானம் இருந்தால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் குறை கூறுகிறார்கள்.அதிலும் தீபா பேரவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜா எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டார். அவரும் தீபாவுடன் தியானத்தில் கலந்து கொண்டார். இதுவும் ஆதரவாளர்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது. என் அத்தையின் ஆசியை பெறுவதற்காக செல்ல திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தள்ளிப் போனது. ஆர்.கே.நகரில் நான் போட்டியிட கூடாது என்று மிரட்டல்கள் வருகிறது.
நான் தீவிர அரசியலை விட்டு ஒதுங்க மாட்டேன். ஆர்.கே.நகரில் போட்டியிட்டு என் மீதான தவறான விமர்சனங்களை முறியடிப்பேன் என்று தீபா கூறினார். அரசியல் விமர்சகர்களும் தீபாவின் தியான நாடகம் எடுபடாது என்று பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வறட்சி மீனவர் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் இருக்கிறது. அவைகளில் தனது கவனத்தை செலுத்தலாம். அதை விட்டு விட்டு இந்த மாதிரி நாடகம் நடத்துவது கேலிக்கூத்தாகத்தான் பார்க்கப்படும் என்று கூறினர். ஓ.பி.எஸ். வழியில் தீபா செயல்படுவதாக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தவாறு உள்ளனர்…