புதிய பரிமாணத்தில் சசிகுமார் நாயகி!

nikila
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாருடன் வெற்றிவேல் மற்றும் கிடாரி படங்களில் நடித்தவர் நடிகை நிகிலா விமல். தற்போது தெலுங்கு படத்தில் நடித்துவரும் இவர், அடுத்ததாக தமிழில் சிபிராஜ் உடன் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இதுவரை கிராமத்து பெண்ணாக நடித்து வந்த நிகிலா முதல் முறையாக சிபிராஜ் உடன் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.

இது வரை கிராமத்துப்பெண்ணாக பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக நிகிலாவை மாடர்ன் பெண்ணாக விரைவில் பார்க்க உள்ளனர். படக்குழுவினர் முதலில் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். வித்தியாசமான கேரக்டரில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். உள்ளூர் பிரச்னையை மையமாக கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Response