பேருந்தின் முன்பகுதி தானாக கவிழ்ந்தது பயணிகள் அதிர்ச்சி

bus
விழுபுரத்தில் அனந்த புறம் பகுதியில் விழுப்புரம் அரசு பேருந்தின் முன் பகுதி தானாக கழன்று விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று அனந்த புரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தானது எல்லீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எல்லீஸ் சாலையில் உள்ள வளைவில் வேகமாக பேருந்து திரும்பும் போது ஏதிரே லாரி ஒன்று வரவே ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்துவதற்காக தீடீரென் பிரேக் பிடித்தார்.இதனால் பேருந்தின் முன்பக்கம் உள்ள பம்பர் மற்றும் தகரம் ஆகியவை தானாக கழன்று நடுரோட்டில் விழுந்தது.இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து பேருந்தில் இருந்து கீழே இறங்கினார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Leave a Response