இந்தியாவில் ஆண்களை விட குறைவாக சம்பதிக்கும் பெண்கள்!

pengal
இந்தியாவில், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண் ஊழியர்களை விட, 25 சதவீதம் குறைவான சம்பளம் பெறுவதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.பணியிடம், பணியின் தன்மை, துறை ரீதியான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், வேலைக்கு செல்லும், 2,000 பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: இந்தியாவில், ஆண் – பெண் ஊழியர்களிடையிலான சம்பள விகித வேறுபாடு, சராசரியாக, 25 சதவீதமாக உள்ளது. பொதுவாக, ஒரே மாதிரியான வேலையை செய்யும், ஆண் – பெண் ஆகிய இருவருக்கும், ஒரே அளவிலான சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆண் ஊழியர்களை விட, பெண் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த, 2015ல், ஆண் – பெண் ஊழியர்களிடையிலான சம்பள வேறுபாடு, 27.2 சதவீதமாக இருந்த நிலையில், 2016ல் இது, 25 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் உற்பத்தி துறையில், சம்பள வேறுபாடு, 29 சதவீதமாகவும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஆண் – பெண் ஊழியர்களிடையிலான சம்பள வேறுபாடு, 25.8 சதவீதமாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி, ஆண் ஊழியர் ஒருவரின் ஒரு மணி நேர சராசரி ஊதியம், 345 ரூபாயாகவும், பெண் ஊழியர் ஒருவரின் ஒரு மணி நேர சராசரி ஊதியம், 259 ரூபாயாகவும் உள்ளது.

Leave a Response