“சர்வதேச சமூகத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்” -வாங் கியூ ஹன்..

japan
வடகொரியா நேற்று 4 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியுள்ளது. அவை ஜப்பான் கடல் எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களாக வட கொரியா அணுஆயுத சோதனை களையும் அதிநவீன ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி நடத்தி வருகிறது. இந்த அச்சுறுத் தலைச் சமாளிக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து தென் கொரிய எல்லைப் பகுதியில் தற்போது போர் ஒத்திகை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா நேற்று 4 ஏவுகணைகளை அடுத் தடுத்து ஏவியது. ஜப்பானை நோக்கி சீறிப்பாய்ந்த அந்த ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல கடல் பகுதியில் விழுந்தன.இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, “ஏவுகணை மூலம் வடகொரியா புதிய மிரட்டலை விடுத்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக் கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரிய பொறுப்பு அதிபர் வாங் கியூ ஹன் கூறும்போது ,“வடகொரியா நேற்று ஏவிய ஏவுகணைகள் சுமார் 260 கி.மீ. உயரத்தில் 1000 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில் விழுந்துள்ளன. இது “சர்வதேச சமூகத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்” என்று கூறினார்.

Leave a Response