நடிகர் விஷாலை கண்டித்து இன்று தயரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்…

koottam
சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் அவர்கள் தயாரிப்பாளர்களை பற்றி ஒரு நாளிதழில் தரைக்குறைவாக பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, இன்று சுமார் 30 தயாரிப்பாளர்கள் ஒன்று திரண்டு விஷாலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைபுலி எஸ்.தாணு, சேரன், ஜன்மேக்ஸ், சுரேஷ்கமாட்சி, டி.சிவா, சிவசக்தி பாண்டியன், ராதாகிருஷ்ணன், ஞானவேல், மற்றும் சிலர் பங்கேற்றனர்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தயரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கலைபுலி தாணு கூறியதாவது, நடிகர் சங்க வளாகத்தை நடிகர் சங்க செயலாளர் விஷால் அவர்கள் சுடுகடுபோல் ஆக்கிவிட்டார் என்றும் விஷால் என்றால் விஷம் என்றும் கூறினார். அது மட்டுமின்றி விஷால் முதலில் நடிக்க கற்றுக்கொள்ளட்டும், பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினார்.

தயாரிப்பாளர் டி.சிவா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது என்னவென்றால், நேற்று நடந்த விஷால் அணியின் தயாரிப்பாளர்கள் தேர்தல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும் போது அவரை கிண்டலடித்து உண்மைக்கு புறம்பாக பேசியதாக தெரிவித்தார். தன்னை பற்றி விமர்சிக்க ஞானவேல்ராஜாவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று காட்டமாக கூறினார்.

பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கலைபுலி தாணு, டி.சிவா, மற்றும் சிலரே தொடர்ந்து திரைப்படங்கள் தயாரித்து வருகின்றனர். கூடத்தில் இருந்த மற்ற தயாரிப்பாளர்கள் தற்சமயம் படங்கள் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட கலைபுலி தாணு, டி.சிவா, ராதாகிருஷ்ணன், ஆகியோர் தயாரிப்பாளர் சங்க போட்டியில் தனி தனி அணியாக போட்டியிடுகின்றனர் என்பது சிறப்பு.

இதுவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தை பலர் விமர்சித்துள்ளனர். அனால் நடிகர் விஷால் அவர்கள் நேற்று அளித்த பேட்டிக்கும், சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிக்கும், எதிர் அணியில் உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதும், ஆர்ப்பாட்டம் செய்வதுமாக உள்ளனர். இச்செயல்களை பார்க்கும் பொது, நடிகர் விஷால் மற்றும் அவர் அணியினர் தமிழ் நாடு தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்களோ என்ற அய்யம் அவர்கள் மத்தியில் எழுந்திருக்குமோ என சிந்திக்க வைக்கிறது.

Leave a Response