தெலுங்கான டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது!!!..

download (3)
டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கான!.. தெலுங்கானா மாநிலத்தை டிஜிட்டல் மாநிலமாக மாற்ற கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது அம்மாநில அரசு. தெலுங்கான மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முன்னிலையில் தெலுங்கான அரசுக்கு கூகுள் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசின் அனைத்து இணையதளங்களையும் மொபைலில் பார்த்து கொள்ளும் வசதி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் ஆன்லைன் மூலம் பாதுகாப்பானதாக மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் கொண்டு வருவது போன்ற எல்லா அம்சங்களும் அடங்கியுள்ளது.

மேலும், இஞ்சினியரிங் மற்றும் எம்.சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு அண்ட்ராய்டு அடிப்படை பயிற்சிகள், மற்றும் புதிய ஆப்கள் உருவாக்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இதனால் மிக விரைவில் தெலுங்கான இந்தியாவில் சிறந்த டிஜிட்டல் மாநிலமாக சிறப்படையும் என்று மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

Leave a Response