“வாட்” வரி உயர்வு !.. ராமதாஸ் கண்டனம் ..

Ramdoss1212_01
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான “வாட்” வரி உயர்வுக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 விழுக்காட்டில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78 உயர்ந்து ரூ.74.39 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அதிகரித்து ரூ.62.49 ஆக உள்ளது. எந்த தேவையுமின்றி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வரி மாற்றம் குறித்த அறிவிப்புகளை அதில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வரிகளை உயர்த்துவது மிகப்பெரிய மோசடியாக கருதுகிறேன்.

‘‘மிக அதிக அளவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும். அதிகரித்து வரும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும் இதனை முதல்வர் பழனிசாமி கருத்தில் கொள்ளவேண்டும். பெட்ரோல் டீசல் மீதான கூட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தமது கவனத்தில் கொண்டு வரி உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Leave a Response