புதிய கட்சி துவங்கும் சசிகலா புஷ்பா மார்ச் 26ல் அறிவிப்பு.

maxresdefault
ஆ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆ.இ.அ.தி.மு.க. எம்.பி திருமதி சசிகலா புஷ்பா அவர்கள் புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளாது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற போது, தில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவின் கன்னத்தில், அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா அறைந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலாளர் தன்னை அடித்தார் என்றும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் பகிரங்க குற்றச்சாட்டை கண்ணீர் மல்க முன் வைத்தார்.

மாநிலங்களவையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். எனினும், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் வலியுறுத்துகிறது என்றும், ஆனாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் சாசிகலா தெரிவித்தார்.

அதிமுக தலைமை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக கருத்துகளை கூறி வந்த சசிகலா புஷ்பா மீது பல்வேறு வழக்குகளும் பாய்ந்தன.

இந்நிலையில், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வருகிற 26-ம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response