முப்பரிமாணம் – விமர்சனம்

maxresdefault

முப்பரிமாணம்

எழுத்து, இயக்கம் – அதிரூபன்

சாந்தனு, சிருஷ்டி டாங்கே

இசை – ஜீ வீ பிரகாஷ்

சாந்தனுவின் ராசியோ இது அவர் என்ன கஷ்டப்பட்டு நடித்தாலும் படம் அவரை தலை குப்புற கவிழ்த்துவிடுகிறது. 80 களிலெடுக்க வேண்டிய கதையை இப்போது எடுத்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்த இரண்டு காட்சிகளிலேயே புரிந்து விடுகிறது ரசிகனை வைத்துச் செய்வார்கள் என்று. அதே எண்ணம் மாறாமல் செய்து அனுப்புகிறார்கள். தனுஷ் தேவதையை கண்டேன் படத்திலும் சிம்பு மன்மதனிலும் செய்து ஜெயித்ததை நம்பி இப்போது களம் இறங்கியிருக்கிறார் சாந்தனு. ஆண்ட்ராய்ட் காலத்தில் பட்டம் போனில் விளையாட்டு காட்டுகிறார்கள். இதெல்லாம் காலவதியாகிவிட்டது என யாரவது சொன்னால் பரவாயில்லை என்றிருக்கிறது.

காதலும் காதலியிம் ஏமாற்றி வாழ்க்கையை தொலத்து புலம்பும் காதலனின் கதை. ஜெட் வேக திரைக்கதைக்கு பழக்கப்பட்டு விட்ட தமிழ் சினிமாவில், புதிதாக சொல்லவில்லை என்றாலும் பராவில்லை சுபப்வாரஸ்யமாவது சொல்லலாம். இவர்கள் கிழிந்த பாயில் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.

ஒரு நொடி கூட ரசிக்க ஏதுமில்லா திரைக்கதை. எப்போதும் புல் மேக்கப்புடன் அலையும் ஆர்ட்டிஸ்ட்டுகள், கடுப்பேத்தும் காமெடிகள் விட்டால் போதுமென்கிற இசை அனைத்தும் சேர்ந்து பாடாய்படுத்துகிறது.

சிருஷ்டி டாங்கே கெட்ட ஹிரோயின் கேரக்டர்களாக தேடிப்பிடித்து நடிப்பாரோ! ம்ம்…

ஆங்கிலப் படமெல்லாம் பார்க்க வேண்டாம் நல்ல தமிழ்ப்படங்களாவது பாருங்கள் போதும் இயக்குநரே!

எப்போது எந்த காட்சி, எதற்கு என எதுவும் புரியவில்லை. நல்ல எடிட்டிங்.

சொல்லொக்கொள்ளும்படியான ஒரே விசயம் சாந்தனு மட்டுமே! தன் கெட்டப் மாற்றி, உடம்பை ஏற்றி, மொட்டை அடித்து உழைத்திருக்கிறார். விழ்லுக்கு இறைத்த நீராய் எல்லாம் வீணாகிவிட்டது. பாவம் அவர் அவர் எடுக்கும் ஒவ்வொரு அறியும் அவவரித் திருப்பி அடிக்கிறது.

முப்பரிமாணம் ரசிகன் பக்கம் இல்லை. தியேட்டருக்கு போகமால் தவிர்த்தால் தலைவலி மிச்சம். முப்பரிமாணம் தட்டுத்தடுமாறுகிறது.

Leave a Response