அரவிந்த் சுவாமியுடன் இணைந்த கௌதம் மேனன்

Arvind-Swamy-Thani-oruvan-JFW
அர்விந்த சாமி 90 களின் முன்னனி ஹீரோ. தமிழ் இளம்பெண்களின் மனதைக் கொள்ளையடித்தவர். இடையில் காணமல் போனவர் மீண்டும் மனிரத்னத்தின் கடல் படம் மூலம் சினிமாவிற்கு வந்தார்.

தனி ஒருவன் படம் தமிழ் சினிமாவின் தனி ஒரு நட்சத்திரமாக அவரை முன்னிறுத்தியது. அதன் பிறகு போகன் நடித்தவர் இப்போது மீண்டும் பயங்கர பிஸி நடிகராகிவிட்டார்.

மணிரதனத்தின் தீவிர ரசிகரான கௌதம் மேனன் மனிரத்னத்தின் ஃபேவரைட் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைவது இப்போது உறுதியாகியுள்ளது.

gautammenon759
சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம் “துருவங்கள் பதினாறு”. இந்தப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அரவிந்த் சாமியை இயக்குகிறார். நரகாசூரன் என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தான் கௌதம் மேனன் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

தயாரிப்பில் இணைந்த இந்தக் கூட்டணி கூடிய விரைவில் இயக்குநர், நடிகராக இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Response