கனவு வாரியம் – விமர்சனம்

Kanavu-Variyam-Tamil-2017-500x500

கனவு வாரியம்

கதை, இயக்கம் – அருண் சிதம்பரம்

ஒளிப்பதிவு – செல்வகுமார்.

இசை – சியாம்.

பல  திரை  விழாக்களுக்கு  சென்ற  படம். வார்னர்  பிராஸ்  தமிழில் வெளியிடும்  முதல்ப்படம்  என சில முத்திரைகளுடன்  வந்திருக்கும்  படம்.

கனவை  ஊக்குவித்தால்  நனவாகும்.  நாடும்  நலமாகும்  என்கிற  கருத்தை  சொல்கிறது  படம்.  ஒரு கிராமத்தில்  வாழும்  இளைஞன்   படிப்பை   தொடந்து  அனுபவத்தின்  வழியே தனக்கு பிடித்தை கற்று வாழ்ந்து  வருகிறான். அந்தக்  கிராமத்தில்  கரண்ட்  இல்லாமல்  போகிறது. தமிழ்நாடு  முழுதும் கரண்ட்  தட்டுப்பாடு  நிலவிய காலத்தில்  நடக்கிறது  கதை.  கரண்ட்  தயாரிக்க  தன் அறிவை கொண்டு  அவன்  முயல்கிறான்   ஊரே  அவனை  கிறுக்கன்  என்கிறது.  அதைத்   தாண்டி  அவன் எப்படி  ஜெயிக்கிறான்  என்பது  தான்  கதை.

Kanavu-Variyam-Movie-Stills-6

ஒரு  கிராமம்  அதன்  மனிதர்கள்,  அந்த  கிராமத்தில்  இயற்கை விவசாயத்தை  முயலும்  ஒரு  ஐடி இளைஞன்,  விவசாயத்தை  தொலைத்து  கஷ்டப்படும்  மனிதர்கள்  என படம்  பல விசயங்களை தொட்டுச்  செல்கிறது.

ஹிரோ   கொஞ்சம்  அழகாக  இருக்கிறார்.  ஆனால்  படம்  முழுதும்  சிரித்துக்கொண்டிருக்கிறார். ஹிரோயின்  ஹிரோவிற்கான  அனைத்து உதவிகளும் செய்கிறார்   அதைத்   தவிர  அவருக்கு  வேறு வேலை  இல்லை.

பல  நடிகர்கள்  படத்தில்   இருக்கிறார்கள்.  முக்கியமாய்  கவர்வது  இளவரசும்,  யோக்  ஜேபியும். ஒவ்வொரு  காட்சியிலும்  இளவரசு  கொடுக்கும்  கமெண்ட்கள்  கலகல!

யோக் ஜேபி  இதில்  வில்லன்  இல்லை.  அதுவே பெரிய ஆறுதல்.  இயற்கை  விவசாயம்  பற்றி  அவர் மூலம்  வகுப்பெடுக்கிறார்கள்.  பிளாக்  பாண்டி  ஹிரோவுடன்  படம்முழுதும்  வருகிறார்.  ரசிகர்கள் மனதில்  நினைப்பதை  கமெண்டகளாக  அடித்து  சிரிக்க  வைக்கிறார்.

கனவை  துரத்தும்  இளைஞன்  அந்த  கனவை அடையும்  பரபரப்பு நமக்கு  தொற்றவில்லை. திரைக்கதை  பாதிநேரம்  எங்கெங்கோ  அலைபாய்கிறது.

புதிய  இயக்குநராய்  பெருமளவில்  கவர்ந்தாலும்  பாதை  மாறுகிற  ஓவராய்  அறிவுரை  கிளாஸ் எடுப்பது  படத்தை  பின்னிழுக்கிறது.

வசனங்கள் பல இடங்களில் அரசியலை பேசுகின்றன.

இசை பல  இடங்களில்  படத்திற்கு  காட்சிகளுக்கு   சம்மந்தமில்லாத  இசையை தந்திருக்கிறது.

மேக்கப்  ஆர்டிஸ்ட்  தனியாக பல பேருக்கு  தலையில்  வெள்ளை சுண்ணாம்பு அடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு  ஒரு  கிராமத்தை  அதன் வெளிகளை நன்றாககாட்டுகிறது.

எடிட்டி ங்கில்    நிறைய தடுமாறும் காட்சிகளை கட்  பண்ணியிருக்கலாம்.

ஒரு புதிய முயற்சியாக  நிச்ச்யமாய் பாராட்டக்   கூடிய  முயற்சி.

Leave a Response