அபாயநிலை ! அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு.

Amaravathy Dam
அமராவதி அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நாற்பதக்கும் மேற்பட்ட குட்டுக் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் குறைந்ததால், நீரின் தன்மை பச்சை நிறமாக மாறிவிட்டது.

இன்றைய நிலவரப்படி அணையின் பனிரெண்டு அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.ஆனால் அதில் பெரும்பகுதி வண்டல் மன்னாகவே உள்ளது.

தற்போது குடிநீர் தேவைக்காக அணையின் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று பொதுபணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் குடிநீர் விநியோகத்தில் கடும் பாதிப்புநிலை ஏற்படும் என்று உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Response