சசிகலா முதல்வராவதற்கு ‘நோ” சொன்ன ஆளுநர்…

Vidyasagar Rao-Sasikala
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக’வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொது செயலாளர் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் சசிகலா அவர்களின் வற்புறுத்தலினால் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை பிப்ரவரி 5’ம் தேதி ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கும் வரையில் அவரே பொறுப்பு முதல்வராக தொடர அறிவுதினார்ர். இந்நிலையில் சசிகலா அவர்கள் அதே நாளில் தன்னுடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் அதிமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 9’ம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு திடீர் விஜயம் செய்து சுமார் நாற்பது நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை கொடுக்க வைத்தார்கள் என்று கூறினார்.

இந்நிலையில், இவருக்கு ஆதரவாக சில மூத்த அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் MLA’க்கள், முன்னால் அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், மைத்ரியன் என்ற ஒரு மக்களவை உறுப்பினரும் நின்றனர். இரு நாட்கள் கழித்து அதிமுக’வின் அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக வந்தனர்.

உட்கட்சி பிரச்சனை சற்று முத்திவிடவே, சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்தித்த சசிகலா, அதிமுக’வின் 129 MLA’களை மூன்று பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். சுமார் 50 MLA’க்கள் அவர்களுடைய விருப்பமின்றி அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர்களுடைய கைபேசிகள் பிடுங்கி வைக்கப்பட்டதாகவும் புகார்கள் கசிந்தன. இந்நிலையில் சில MLA’களின் உறவினர்கள் MLA’களை மீது தரும்படி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த MLA’களை உடனடியாக மீட்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இது ஒரு புறம் நடக்க, நேற்று மும்பையில்லிருந்து சென்னை வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் மாலை 5 மணியளவில் சந்தித்து பேசினார். பினார் 6 மணியளவில் சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய தலைமையில் அமைச்சரவை அமைக்க உத்திரவிடும்படி தன்னுடைய ஆதரவு MLA’க்கள் கையொப்பமிட்ட மனுவை ஆளுநரிடம் கொடுத்தார். இந்நிலையில் தன்னை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைப்பர் என சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் காட்சி வேறு விதமாக மாறியது. ஆளுநர் இன்று தலைமை செயலாளர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர் காவல்துறை ஆணையாளர் மற்றும் முக்கிய IAS அதிகாரிகளை அழைத்து பேசினார். ஊடகங்கள் மற்றும் சமுகவளைத்தலங்களில் சசிகலா மற்றும் அவருடைய சகாக்கள் MLA’களை கடத்தி வைத்துள்ளதாக வந்த செய்தி டெல்லி வரை பரவியது. இதன் காரணமாக மத்திய அரசுக்கும் சரி, தமிழக பொறுப்பு ஆளுநருக்கும் சரி சசிகலாவை எப்படி முதல்வராக பதவி பிராமணம் செய்வதை தவிர்ப்பது என்று ஆலோசித்துள்ளனர்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு இன்னும் சில தினங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரவுள்ளது. அதில் சசிகலா தண்டிக்கப்பட்டால் அவரால் முதல்வராக நீடிக்க முடியாது. தற்போது சசிகலா MLA’வாக போட்டியிட்டு வெற்றி பெறவுமில்லை எனவே சட்ட விதி 164(1) படி சசிகலாவை பலத்தை நிரூபிக்க அழைத்து முதல்வர் ஆக்க இயலாது. சட்ட விதி 164(4) படி சசிகலாவை பலத்தை நிரூபிக்க அழைத்து முதல்வர் ஆக்கலாம் என்றாலும், ஒருவர் அமைச்சராக நியமிக்கப்ப,ட்டு ஆறு மாதத்திற்குள் MLA’வாக தேர்ந்தெடுக்க படவில்லையெனில் அவருடைய அமைச்சர் பதவி தானாக பறிபோய்விடும். இந்நிலையில் சசிகலா மீது உள்ள உச்சநீதிமன்ற வழக்கு சசிகலாவிற்கு எதிராக வந்து அவர் குற்றம் சாட்டப்பட்டால் அவரால் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட முடியாது. இதன் காரணமாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சருக்கு, ஒரு மூன்று பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேல குறிப்பிட்டுள்ள காரணங்களை சுட்டிக்காட்டி சசிகலா அவர்களுக்கு தற்போது முதல்வராக பதவி பிரமாணம் செய்ய இயலாது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகலாவிற்கு “நோ” சொன்ன ஆளுநர், உச்சநீதிமன்றம் சசிகலாவிற்கு சாதகமாக தீர்ப்பு சொன்னா “யெஸ்” சொல்லுவாரோ என்னவோ!

Leave a Response