ஜனவரி 26 அன்று திரைகளை தட்ட வருகிறது ‘அதே கண்கள்’….

Adhey Kangal
ரோஹின் வெங்கடேசன் என்ற அறிமுக இயக்குனரால் இயக்கபட்டிருக்கும் படம் ‘அதே கண்கள்’. இப்படத்தை, பல வெற்றி படங்களை தயாரித்து மற்றும் வெளியிட்டுள்ள திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பாக சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் கலையரசன் நாயகனாகவும், ஜனனி நாயர் மற்றும் சிஷ்வட நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணன், சஞ்சய் ஜெயராமன், அரவிந்தராஜ், லிங்கா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, லியோ ஜான் பால் படத்திற்கு படத்தொகுப்பை செய்துள்ளார்.

இப்படம் ஒரு ரொமேன்டிக் த்ரில்லர் கதையம்சத்துடன் பயணிக்கும் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, ஈரோடு மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

‘அதே கண்கள்’ திரைப்படம் ஜனவரி 26’ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

Leave a Response