மாவட்ட ஆட்சியரை ஓடவிட்ட அலங்காநல்லூர் மக்கள்….

Madurai Collector Runs
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்துகொண்டிருக்கும் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் தமிழக முதல்வரின் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்’வால் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அலங்காநல்லூர் மற்றும் வேறு போராடத்தளங்களிலும் இந்த தற்காலிக அவசர சாதம் வேண்டாம், நிரந்தர சட்டம் மட்டுமே தேவை என போராடி வருகின்றனர்.

இருப்பினும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், அலங்காநல்லூர் பேரூராட்சி, பொதுப்பணித்துறையினர் நேற்று மாலை முதல் மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தும் விதமாக வாடிவாசல் பகுதியை சுத்தம் செய்து, பார்வையாளர் அரங்கம், தடுப்புகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் இடுபட்டிருந்த மக்கள், இதுபற்றி விஷயம் அறிந்தவுடன் அவ்விடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களுக்கு நிரந்தர சட்டம் மட்டுமே தேவை, இந்த தற்காலிக அவசர சட்டம் தேவை இல்லை என கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, மாவட்ட ஆட்சியர், வீரராகவ ராவ் அலங்கானல்லுருக்கு வந்து ஜல்லிக்கட்டு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்தை பார்வையிட வந்தார். அப்போது அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களும் கிராம வாசிகளும், மாவட்ட ஆட்சியர் காரிலிருந்து இறங்கியவுடன், அவசர சட்டம் வேண்டாம் என்றும் தங்களுக்கு நிரந்தர சட்டம் மற்றுமே தேவை என கோஷமிட்டனர். போராட்டக்காரர்களின் கோபத்தை கண்ட ஆட்சியர் வந்தவழியே கார் ஏறி ஓடவிட்டார்…

Leave a Response