த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை: த்ரிஷாவின் தாயார் விளக்கம்

trishamomநடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தையும் பதிவிடவில்லை என அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லக்கட்டு தடைக்கு காரணாமான பீட்டா அமைப்புக்கு நடிகை த்ரிஷா ஆதரவு அளித்து வருவதாக சமூக வலைதளத்தில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் காரணாமாக தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து தற்காலிகமாக நடிகை த்ரிஷா வெளியேறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், ‘த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை, பீட்டா அமைப்பிலும் உறுப்பினாராக இல்லை’ என விளக்கமளித்துள்ளார். மேலும் த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தவறான கருத்துகளை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Response