ரெட் பஸ் மூலம் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் செல்லும்: ஆம்னி பஸ் சங்கத் தலைவர் அப்சல்

parveen-travel-afzalரெட் பஸ்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்கள் அனைத்தும் செல்லும். பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்கள் செல்லாது என்பது வதந்திகள். எனவே யாரும் பயப்படவேண்டாம் என ‘ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல்’ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஒற்றன் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

“ரெட் பஸ்ஸில் பதிவு செய்யப்ப டுள்ள டிக்கெட்கள் அனைத்தும் செல்லுபடியாகும். மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். தீபாவளிக்கு 30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததால், அவர்களின் பேருந்துகளை ரெட் பஸ் ‘ஆப்’பில்  இருந்து நீக்கப்பட்டது.

அந்த காரணத்தினால் அவர்கள் இந்த மாதிரியான பொய்யான செய்திகளை பரப்பியுள்ளார்கள். மக்கள் ரெட் பஸ் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்கள் அனைத்தும் செல்லும், இது குறித்து யாரும் பயப்படவேண்டாம்.

ஒரு சிலர் பரப்பிய தவறான செய்திகளின் உண்மைகளை அறிந்து கொண்டு பத்திரக்கைகளும், ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என ‘ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல்’ கூறியுள்ளார்.

ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல் பேட்டி காணொளி – https://www.youtube.com/watch?v=M9AyDT5qw7k

Leave a Response