கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

pongalபொங்கல் பண்டிகையை மத்திய அரசின் கட்டாய  விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று அறிவித்து இருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு கட்டாய விடுமுறை கிடையாது எனவும், பொங்கல் கொண்டாடுபவர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தது.

தமிழக மக்களும், தமிழகத்தில் உள்ள கட்சி தலைவர்களும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். விஜயகாந்த், வைகோ, முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகையை கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.

இதையடுத்து பொங்கல் பண்டிகை கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தசரா விடுமுறை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Response