‘தரமணி’ படத்தின் பாடல்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்

bg1ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்களை நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.

இதுபற்றி தயாரிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில்,

“தங்கம் போன்ற மனதை படைத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அதனால் தான் அவர் கைப்படும் எல்லா காரியங்களும், தங்கத்தை போல் ஜொலிக்க ஆரம்பித்து  விடும்.  2016 ஆம் ஆண்டில் ரசிகர்களால்  அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட  எங்களின் தரமணி பாடல்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பெருமை. 2016 ஆம் ஆண்டை மகிழ்ச்சியான உள்ளத்தோடு வழி அனுப்பவும், 2017 ஆண்டை புத்துணர்ச்சியோடு வரவேற்கவும் ஏற்ற சிறப்பம்சங்களை எங்கள் தரமணி பாடல்கள் நிறைவாக பெற்று  இருக்கின்றது. வர்த்தக உலகிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும்   நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் எங்களின் தரமணி திரைப்படத்தை, வருகின்ற புத்தாண்டில்  வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்”  என்று கூறியுள்ளார்.

Leave a Response