மணல் கயிறு 2 திரை விமர்சனம்


manal-kayiru-2-movie-011982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் “மணல் கயிறு’. இப்படத்தை இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றது போல் ‘மணல் கயிறு 2’ படத்தை இயக்கியுள்ளார் மதன் குமார்.

இந்தப் படத்தில் எஸ்.வி.சேகரின் மனைவியாக ஜெயஸ்ரீ நடித்திருக்கிறார். எஸ்.வி.சேகரின் மகள் பூர்ணா. பூர்ணா தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று இருக்கிறார். எஸ்.வி.சேகர் தன் மகளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைபதற்காக மாரடைப்பு வந்த்துபோல் நடித்து மகளை சம்மதிக்க வைக்கிறார். கல்யாணத்திற்கு சம்மதித்த பூர்ணா மாப்பிள்ளை இப்படித்தான் இருக்கவேண்டும் என 8 கண்டிஷன் போடுகிறார். இந்த கண்டிஷனைக் கேட்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சியடைய.. அப்பா எஸ்.வி.சேகரோ அதைப் பற்றி கவலையேபடாமல் பூர்ணாவுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறார்.

இதைப்பற்றி விசுவிடம் கூறும் ஜெயஸ்ரீ தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை தேடி தர சொல்லி கேட்கிறார்.

இந்த கண்டிஷனில் ஒன்று கூட இல்லாத ஹீரோ அஸ்வினை பூர்ணாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார் விசு. போகப் போக அஸ்வினின் சுயரூபம் வெளிவர இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் வயிறு வலிக்க சிறிக்க வைக்கும் காமெடி அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் கூட்டனியில் வரும் விள்ம்பர வீடியோக்கள்தான்.

முந்தைய படங்களைவிட அஸ்வின் இந்தப் படத்தில் நன்றாக நடித்துள்ளார். அப்பாவைப் போல டைமிங் காமெடிகள் எல்லாம் பக்கா. சண்டை காட்சிகள் , நடனம் என அனைத்தும் சூப்பர்.

எஸ்.வி. சேகரின் டைமிங் காமெடி இப்போது வரைக்கும் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. அதிலும் ஷாம்ஸ், சுவாமிநாதன் கூட்டணியில் இண்டர்வியூ காட்சிகள் செம கலாட்டாக்கள்..! விசுவின் நடிப்பை சொல்லவா வேண்டும். மீண்டும் திரைக்கு வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.

பூர்ணாவின் நடிப்பு நல்லாதனே இருக்கு, ஏன் வாய்பே கிடக்கலனு தெரியல. படத்துல் பூர்ணா இல்லாத சீனே இல்ல, அப்படி இருக்கு ஸ்கிரிப்ட்.

இசை தரண் குமார் “அடியே தாங்கமாட்டேனே” மற்றும் “முதல் மழை” பாடல்கள் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. பின்னணியும் காமெடிக்கு பொருத்தமாகவே கொடுத்திருக்கீங்க. ஒளிப்பதிவு கோபி வாழ்த்துகள்.

இயக்குனர் மதன் குமார், படத்தில் காட்சிகள் எல்லாம் அருமையாக அமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் எஸ்.வி.சேகர் போட்ட எட்டு கண்டிஷன் போடும் காட்சிகளை வைத்து இப்போதைய மக்களுக்கு கதையை புரிய வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மணல் கயிறு 2’ காமெடிக்கு பஞ்சமே இல்லை,  இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


 

Leave a Response