தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

girijaதமிழகத்தின புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஊழல் குற்றச்சாட்டில் பதவி இழந்த ராமமோகன் ராவுக்குப் பிறகு இவர் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மதுரை மாவட்ட ஆட்சியாராக பதவி வகித்தவர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் எஸ்.வெங்கிட்டராமனின் மகள் தான் இவர். நடிகர் எஸ்.வி.சேகரின் சொந்த தம்பி மனைவிதான் கிரிஜா வைத்தியநாதன்.

பணியில் சேர்ந்த 1981 முதல் இன்று வரை கிரிஜா வைத்யநாதன் எந்த கட்சி தலைமையுடனும் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்துள்ளார்.

1959 தஞ்சையில் பிறந்த கிரிஜா சிறுவயதிலே படிப்பில் சிறந்து விளங்கினார்.  இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர்.

2019 வரை பதவியில் நீடிக்கவுள்ள கிரிஜா வைத்யநாதன் நலவாழ்வு மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் முனைவர் டாக்டர் பட்டம் பெற்றவர்.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த போது மாவட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்றவராக இருந்தார்.

சுகாதாரத்துறையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

Leave a Response