இதுவரை ரூ.3185 கோடி பறிமுதல்


it-seizes-cash-in-chennai_babaa80c-c6d1-11e6-ad67-c7f41c1c9a76நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிறகு நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3185 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடி புகார்கள் தொடர்பாக 3,100 நிறுவனங்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும் மொத்தம் 677 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் டிசம்பர் 19 ம் தேதி வரை ரூ.3185 கோடிக்கும் அதிகமான கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.428 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.86 கோடி புதிய ரூ.2000 நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response