நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம்


pooja-umashankar-photos-in-vidiyum-munn-movie-3ஜே ஜே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவர் தமிழில் அஜீத், ஆர்யா, மாதவன் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை பூஜாவிற்கும் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் ரகசியமாக திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் உண்மையில் பூஜாவுக்கும் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட் விதாகனுக்கும் தான் கொழும்புவில் வைத்து ரகசியமாக திருமணம் திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பூஜா, பிரஷான் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.


 

Leave a Response